ஒரு தலைக் காதலால் விபரீதம்.. இளம்பெண் கழுத்தை அறுத்த காதலன் : தானும் கழுத்தை அறுத்த கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2024, 8:17 pm

ஆந்திர மாநிலம் ஏளூர் சத்திரம்பாடு எம்.ஆர்.சி.காலனியை சேர்ந்த ரத்னகிரேஸ் ( 27) அதே பகுதியில் உள்ள சித்தார்த்தா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் முசனூரை சேர்ந்த ஏசுரத்தினத்துடன் சில மாதம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

ஆனால் ஏசுரத்தினம் காதலை மறக்க முடியாததால் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியூறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.

ஆனால் தங்கள் மகள் விருப்பத்திற்கு மாறாக செய்ய முடியாது எனக்கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று மதியம் ரத்னா கிரேசி சத்திரம்பாடு அருகே நடந்து சென்று கொண்டுருந்தபோது அங்கு வந்த ஏசுரத்தினம் கத்தியை கொண்டு ரத்னம் கிரேசி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடி இறந்தார். இதனையடுத்து ஏசுரத்தினம் தனது கழுத்தையும் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏசுரத்தினத்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்தினம் கிரேசி உடல் உடற்கூறு ஆய்வுக்கு ஏளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரத்தினம் கிரேசி பெற்றோர் கூறுகையில் ஏசுரத்தினம் தனது மகளை 10 ஆம் வகுப்பில் இருந்து காதல் என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் மூன்று நாட்களுக்கு முன்பு ரத்னகிரேசிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இதனை அறிந்த ஏசுரத்தினம் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து ஏளூர் மூன்றாவது நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!