ஆஸி., வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவு: மணல் சிற்பம் மூலம் அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்..!!

Author: Rajesh
16 May 2022, 11:39 am

புவனேஸ்வர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு மணல் சிற்பம் மூலம் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்ததாக குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதி செய்தது.
ஆண்ட்ரூ சைமண்ட்சின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ஆண்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அந்த சிற்பத்தின் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் காலமானதை அறிந்து வருந்துகிறேன். இது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?