புத்த பூர்ணிமா நிகழ்ச்சி…நேபாளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி: இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

Author: Rajesh
16 May 2022, 12:25 pm
Quick Share

காத்மாண்டு: புத்த பூர்ணிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேபாளம் சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார்.

புத்த ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். இந்நிலையில் நேபாளம் லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். அங்கு லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

பிரதமர் ஆன பிறகு அவர் நேபாளத்துக்கு செல்வது இது 5வது தடவை ஆகும். ஆனால், புத்தர் பிறந்த ஊரான லும்பினிக்கு முதல் முறையாக செல்கிறார். மாயதேவி கோவில் தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். புத்த கலாசார பாரம்பரிய மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபாவும் நீர்மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில், கல்வி, கலாசார உறவை மேலும் வலுப்படுத்தும்வகையில், இருநாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

இதுதவிர, சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நேபாள கல்வி நிறுவனங்கள் இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. புத்த ஜெயந்தியை முன்னிட்டு, நேபாள அரசு ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்டத்தில் நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு அவர் புத்தரின் சிறப்புகள் பற்றி பேசுகிறார்.

Views: - 447

0

0