தெலுங்கானாவில் திருப்பம்.. காங்கிரஸ் கட்சியை ஆட்சியில அமரக்கூடாது : பிஆர்எஸ் உடன் கூட்டணி போடும் பாஜக, ஓவைசி?!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 12:25 pm
KCR BJP
Quick Share

தெலுங்கானாவில் திருப்பம்.. காங்கிரஸ் கட்சியை ஆட்சியில அமரக்கூடாது : பிஆர்எஸ் உடன் கூட்டணி போடும் பாஜக, ஓவைசி?!!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அன்றயை தினம் ஒரே கட்டமாக 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் சந்திரசேகர்ராவ் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் தெலுங்கானா உருவாகி 2 தேர்தல் நடந்துள்ள நிலையில் அதில் சந்திரசேகர்ராவின் கட்சியை வெற்றி பெற்றுள்ளது. அவரே 2 முறையும் முதல்வராக உள்ளார்.

இப்போது நடந்தது தெலுங்கானாவின் 3வது சட்டசபை தேர்தல். இதில் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்க முயற்சித்த சந்திரசேகர் ராவுக்கு தற்போது ஷாக் கிடைத்துள்ளது. அதாவது காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் தற்போது உற்சாகத்தில் உள்ளனர். அதாவது இந்த நிலவரப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கலாம். ஆனால் இன்னும் ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ரிசல்ட்டுகள் மாற்றம் ஏற்படலாம். ஒருவேளை அப்படி மாற்றம் நிகழும்போது மெஜாரிட்டிக்கு தேவையான 60 இடங்களை விட காங்கிரஸ் குறைவாக பெற்றால் அங்கு கூட்டணி ஆட்சியை அமையலாம். அதோடு யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை உருவாகும்.

இந்த சூழல் உருவானால் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு பாஜக மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இணையலாம் என கூறப்படுகிறது. இந்த 3 கட்சிகளுக்கும் மெஜாரிட்டிக்கான எம்எல்ஏக்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் கைகோர்ப்பார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. .அதாவது காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க பகையை மறந்து 3 கட்சிகளும் கூட்டணியாக ஒன்றிணையலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் பாஜக, பிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை பகையாளியாக பார்த்து வருகிறது. அதோடு காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியை தொடர்ந்த பாஜகவின் ‛பி’ டீம் என விமர்சனம் செய்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தெலுங்கானாவில் காங்கிரஸை அரியணை ஏற விடாமல் தடுக்க இப்படி 3 கட்சிகளும் ஒன்றிணைவார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Views: - 247

0

0