செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு மகுடம் : 2வது முறையாக உயரிய கவுரவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 5:40 pm

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.,9) இதன் நிறைவு விழா நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் பிடே (FIDE) எனப்படும் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகளும், எதிராக 16 ஓட்டுகளும் கிடைத்தன. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…