இலவச பேருந்து பயணத்தில் அடிதடி… இருக்கைக்காக பெண்களிடையே குடுமிப்பிடி சண்டை : ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 5:06 pm
Quick Share

தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ள ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து போக்குவரத்து திட்டத்தை துவக்கி நடத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தெலுங்கானா மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் காரணமாக பெண்கள் இதற்கு முன்னர் இருந்ததை விட, தற்போது தெலுங்கானாவில் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹைதராபாத் அருகே உள்ள ஷஹீராபாத்தில் இருந்து சங்காரெட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றில் அதிக அளவிலான பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பயணம் செய்தனர்.
அப்போது இருக்கையில் பிடிப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முதிர்ந்து குழந்தைகள் கண் முன்னே ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து கடுமையாக தாக்கிக் கொண்டனர். பேருந்து ஓட்டுனர், நடத்துனர், சக பயணிகள் ஆகியோர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர்.

ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்து கழகம் பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டத்தின் மூலம் கூடுதல் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், பெண்களின் இலவச போக்குவரத்துக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க இயலாத நிலையில் இருப்பதாகவும், இந்த திட்டத்தை முழு வீச்சில் தெலுங்கானா மாநில அரசால் தொடர இயலாது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Views: - 371

0

0