ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா : முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா தொடக்கம்

7 November 2019, 8:23 pm
SRI-UPDATENEWS360
Quick Share

திருச்சியில் இருக்கும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழாவானது, அடுத்த மாதம் டிசம்பர் 25-ம் தேதியன்று, திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கப்பட்டு , ஜனவரி மாதம் 16-ம் தேதி வரையிலும் நடைபெறுகின்றது.

டிசம்பர் மாதம் 26-ம் தேதி பகல் பத்து உற்சவமானது தொடங்குகின்றது. ஜனவரி 5-ம் தேதி மோகினி அலங்காரமும், 6-ம் தேதியன்று முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்வும் நடைபெறுகின்றது. மேலும், 12-ம் தேதியன்று, திருக்கைத்தல சேவையும், 13 – ம் தேதியன்று, திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சியும், 15-ம் தேதியன்று தீர்த்த வாரியும், 16-ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல, மேளதாளம் முழங்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி முகூர்த்தகாலுக்கு மரியாதை செலுத்தியது.

முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி, திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

Leave a Reply