திருவண்ணாமலை திருக்கார்த்திகை : கொடியேற்றம் விழா துவக்கம்

18 November 2019, 4:12 pm
TVM-UPDATENEWS360
Quick Share

பஞ்ச பூதங்களுக்கு உரிய ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருத்தலம் விளங்குகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

திருவண்ணாமலையில், பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கமாகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறுகின்ற முக்கிய விழாக்களில், கார்த்திகை தீபத் திருவிழாவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.

கார்த்திகை தீபத் திருவிழாவானது, வருகின்ற 1-ம் தேதி கார்த்திகை தீப கொடியேற்றத்துக்காக, தொடங்குகின்றது. திருக்கார்த்திகை தீப விழாவிற்கான முன்னேற்பாடான பணிகளை, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, நடைபெற்று வருகின்றது.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி நகரில் பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.