நம்பர்-1 செஸ் வீரரை வீழ்த்தி 16 வயது தமிழக சிறுவன் சாதனை… உலக கவனத்தை ஈர்த்து ஆச்சர்யம்…!!

Author: Babu Lakshmanan
21 February 2022, 8:08 pm

சென்னை : உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்து தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

இணைய வழியாக நடக்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்னும் 16 வயது சிறுவன் பங்கேற்றார். முதல் 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 8வது போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்செனை எதிர்கொண்டு விளையாடினார்.

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய பிரக்ஞானந்தா, 39வது நகர்த்தலில் கார்ல்சென்னை வீழ்த்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து தோல்வியடைந்த நிலையிலும், உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சென்னை தோற்கடித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் பிரக்ஞானந்தா.

இவர் 2013ல் நடந்த 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?