வார்னருக்கு ஷாக் கொடுத்த தீபக்… 5 போட்டிகளில் மோசமான தொடக்கம்… சென்னையை சமாளிக்குமா டெல்லி..?

Author: Babu Lakshmanan
10 May 2023, 10:05 pm

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்., இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் சென்னைக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. கெயிக்வாட் (24), துபே (25), ராயுடு (23), ஜடேஜா (21), தோனி (20) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் மார்ஷ் 3 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டும், கலில் அகமது, லலித் யாதவ், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் பேட் செய்த டெல்லிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் 2வது பந்திலேயே வார்னர் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, சால்ட் 17 ரன்னிலும், மார்ஷ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

தற்போது நிலவரப்படி 25 ரன்னுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து அந்த அணி தடுமாறி வருகிறது. டெல்லி அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பானது, 3 முறை ரன் எதுவுமின்றியும், ஒரு முறை ஒரு ரன்னிலும் முறிந்துள்ளது. இதுவே அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!