சென்னை அணிக்கு புதிய சிக்கல்.. ஐபிஎல் தொடரில் இருந்து தடை விதிக்க கிளம்பிய முழக்கம் ; அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 2:33 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் சிறப்பாக விளையாடி வரும் சென்னை அணி, இதுவரையில் 4 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்த ஆண்டோடு தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்படும் நிலையில், சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. எனவே, சென்னை அணியின் ஒவ்வொரு போட்டிகளையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்நோக்கி பார்த்து வருகின்றனர்.

சென்னை அணிக்காக இதுவரையில் தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, பத்ரிநாத், முரளி விஜய், ஸ்ரீகாந்த், அஸ்வின் உள்ளிட்டோர் விளையாடி உள்ளனர். கடந்த சீசனில் இடம்பெற்ற இளம் வீரர் ஜெகதீசனுக்கு ஒருசில போட்டிகளில் மட்டுமே ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, இந்த சீசனில் அவரை கொல்கத்தா எடுத்துள்ளது.

இதனால், நடப்பு தொடரில் விளையாடி வரும் சென்னை அணியில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டசபையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதாவது, தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும், ஒருவரைக் கூட சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழர்களே இல்லாத அணியை மாநிலம் முழுவதும் விளம்பரம் செய்து சிஎஸ்கே நிர்வாகம் லாபம் ஈட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், சென்னை அணியை தடை செய்ய வேண்டும் எனக் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 354

0

0