100வது டெஸ்ட்டில் இரட்டை சதம்… புதிய சாதனை படைத்து வார்னர் கொடுத்த பதிலடி ; MCG-யில் நடந்த சம்பவத்தால் சோகத்தில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 11:49 am

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மெல்போர்னில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100வது டெஸ்ட் ஆகும்.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கவாஜா 1 ரன்னிலும், லபுஸ்சேன் 14 ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆனால், வார்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது.
இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும், ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில், 2வது நாளான ஆட்டம் தொடங்கியதும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் இரட்டை சதமடித்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த வார்னர், இரட்டை சதம் அடித்ததன் மூலம், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவரது 3வது இரட்டை சதம் இதுவாகும்.

மேலும், ஜோ ரூட்டுக்குப் பிறகு தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான தனது 100வது டெஸ்டில் ரூட் 218 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரட்டை சதம் அடித்து அதனை வார்னர் கொண்டாடிய போது, அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் மேற்கொண்டு விளையாட முடியாத நிலை உருவானது. பின்னர், அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!