ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ் : திடுதிப்பு முடிவுக்கு என்ன காரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
18 July 2022, 6:03 pm
Quick Share

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எட்டா கனியாக இருந்து வந்த ஐசிசி உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை, நினைவாக்கிக் கொடுத்தவர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மட்டுமல்லாது பவுலிங், பீல்டிங் என அனைத்து விதமான துறைகளிலும் சம பங்களிப்பை கொடுப்பதில் வல்லவர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பிலிண்டாஃப், தென்னாப்ரிக்கா அணியின் ஆல் ரவுண்டர் கல்லீஸ்-க்கு அடுத்தபடியாக தலைசிறந்த ஆல்ரவுண்டராக ஸ்டோக்ஸ் கருதப்பட்டு வந்தார்.

தற்போது, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிதான் அவர் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

இங்கிலாந்துக்காக 104 ஒருநாள்போட்டிகளில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், 39.44 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 2919 ரன்களை மட்டும் எடுத்துள்ளார். இந்த வடிவத்தில் 3 சதங்கள் 21 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 95.26. அதிகபட்ச ஸ்கோர் 102 நாட் அவுட். அதேபோல, ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், பெஸ்ட் பவுல்டிங் 61/5.

ஓய்வு குறித்து பேசிய ஸ்டோக்ஸ், “இந்த வடிவத்திலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். என் சக வீரர்களுடன் இந்த வடிவத்தில் ஆடிய அனைத்து கணங்களையும் நேசிக்கிறேன். என்னால் 100% பங்களிப்பு செய்ய முடியவில்லை. யார் இங்கிலாந்தின் உடைகளை அணிந்தாலும் அதை விரயம் செய்ய முடியாது.

ஆகவே ஓய்வு பெறுவது நல்லது என்று முடிவெடுத்தேன். 3 வடிவங்கள் என்பது என்னால் இப்போது இயலாத ஒன்று. மேலும் இன்னொருவரின் இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், இன்னொரு வீரர் என்னை விட ஜாஸ் பட்லருக்கு நல்ல பங்களிப்பு செய்ய முடியும் என்றே கருதுகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Views: - 497

0

0