தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு : 601-700 யூனிட்டிற்கு ரூ. 275 உயரும்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 7:42 pm
Eb Price Increase - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஜூலை 18) தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தவும் மாற்றி அமைக்கவும் 28 முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

•100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை.
•200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50(மாதத்திற்கு) உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
•301-400 யூனிட்டிற்கு ரூ.147.50(மாதத்திற்கு)
•500 யூனிட்டிற்கு மேல்- ரூ.298.50, (மாதத்திற்கு)
•501-600 யூனிட்டிற்கு ரூ.155 (இரு மாததிற்கு)
•601-700 யூனிட்டிற்கு ரூ.275 (இரு மாதத்திற்கு)

ரயில்வே மற்றும் கல்விநிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 65 காசுகள் உயரும் என அமைச்சர் சொந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

Views: - 401

0

0