கோலியின் ஃபார்ம் அவுட் எதிரொலி..? வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் புறக்கணிப்பு… முழு அணியின் விபரம் இதோ..!!

Author: Babu Lakshmanan
14 July 2022, 3:13 pm
Quick Share

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விராட் கோலிக்கு இடம்பெறவில்லை.

இங்கிலாந்து தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள் போட்டி,5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா ,பும்ரா ,ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். டி 20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, சாஹல் பெயர் இடம் பெறவில்லை. இவர்கள் மூவரும் அணியில் இடம் பெறாததன் காரணம் குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ வெளியீட்டில் எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை.

இந்திய டி20 அணி : ரோஹித் சர்மா (கேப்டன் ), இஷான் கிஷன், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் அய்யர் , தினேஷ் கார்த்திக்,ரிஷப் பண்ட் , ஹார்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்

Views: - 577

0

0