எம்.பி. பதவிக்கு அடிபோடும் ஆர்.எஸ். பாரதி.. அதிமுகவை சீண்ட இதுதான் காரணம்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பளார்..!!

Author: Babu Lakshmanan
14 July 2022, 1:24 pm
Quick Share

அதிமுக குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவரையும், அதிமுகவையும் சீண்டும் விதமாக திமுக எம்பியும், அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, தி.மு.க.வை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்திகொண்டிருக்கிறது என்றும் தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டி பார்த்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திமுக பிரச்சினையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலையிடுவது கண்டிக்கத்தக்கது. தனிப்பட்ட நிறுவனங்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எந்த அரசியல் கட்சியாவது மத்திய அரசைக் கண்டித்து போர்க்குரல் எழுப்பியுள்ளதா? மீண்டும் ஒருமுறை எம்.பி. பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டு பேசுகிறார், என தெரிவித்துள்ளார்.

Views: - 282

0

0