‘எனக்கு எப்பவுமே நீங்கதான் GOAT… இது கடவுள் கொடுத்த வரம்’… ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறிய விராட் கோலி!!

Author: Babu Lakshmanan
12 December 2022, 2:33 pm

உலகக்கோப்பை கால்பந்து வெல்லும் கனவு தகர்ந்துவிட்டதாக உருக்கமாக பேசிய ரொனால்டோவுக்கு, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆறுதல் கூறியுள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிரான்ஸ், அர்ஜெண்டினா, மொராக்கோ, குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் கால் இறுதிப் போட்டியில் மொரோக்கோவுடனான மோதலில் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், போர்ச்சுக்கல் அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்துவிட்டதாகக் கூறி அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதது, அனைவரின் மனதையும் உருகச்செய்தது.

இந்நிலையில், ரொனால்டோவுக்குவிராட் கோலி ஆறுதல் தெரிவித்து டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ;- நீங்கள் இதுவரை விளையாட்டுக்காகவும், விளையாட்டு ரசிகர்களுக்காகவும் செய்தது உலகக்கோப்பைக்கெல்லாம் அப்பாற்ப்பட்டது. நீங்கள் விளையாடுவதைப் பார்க்கும்போது நானும் சரி உலகில் உள்ள மற்ற ரசிகர்களும் சரி என்ன உணர்கிறோம் என்பதை எவற்றாலும் விளக்க முடியாது. அவையெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.

ஒரு மனிதனுக்கு உண்மையான ஆசீர்வாதம் எதுவென்றால், ஒருவரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் அவர் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதும்தான். நீங்கள் தான் எனக்கு GOAT, என தெரிவித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!