ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா… பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் கூறும் இந்தியர்கள் : வைரலாகும் ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 7:18 pm
Pak - Updatenews360
Quick Share

டி20 உலகக் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. என்னதான் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவினாலும், இந்திய வீரர்கள் பாக் வீரர்களின் பவுலிங்க திறமையை பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்துடன் விளையாடும் போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை இங்கி., வீரர்கள் துவம்சம் செய்தனர். ஆனால் பாக் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அருமையாக பந்து வீசியதாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டியுள்ளார். அதே போல இங்கிலாந்து அணிக்கும் இந்திய வீரர் ஷமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அப்ரிடி காயம் காரணமாக விலகியதே அணிக்கு பின்னடைவு என சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். பக்கத்து நாடானா பாகிஸ்தானுடன் போட்டியாக இருந்தாலும் இந்தியர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆறுதல் தெரிவித்து வருவது, இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 379

0

0