ஸ்டொய்னிஸ் அதிரடி ஆட்டம் வீண் : த்ரில் வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தில் ராஜஸ்தான்…சாஹல் அசத்தல் பந்துவீச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 11:46 pm

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 20-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள். நிதானமாக ஆடத்தொடங்கிய பட்லர் 13 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் களமிறங்கிய ரஸ்ஸி, 4 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சிம்ரன் ஹெட்மயர், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்ட தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த அஸ்வின், retire out முறையில் வெளியேறினார்.

அவருக்கு பதிலாக ரியான் பராக் களமிறங்கி 8 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 36 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கயி லக்னோ அணியின் கேப்டனர் கேஎல் ராகுல் டக் அவுட் ஆனார். டி காக் 39 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் சுழலில் வீழ்ந்தார்.

கவுதம் டக் அவுட ஆக, ஹோல்டர் மற்றும் ஹீடா அவுட் ஆகினர். லக்னோ அணி திண்டாடிய நேரத்தில் ஸ்டொய்னிஸ் மற்றும் பாண்டியாவின் அதிரடியால் ரன்கள் குவிந்தது. இறுதி ஓவரில் 15 ரன் தேவைப்பட்ட போது 11 ரன்கள் எடுத்த நிலையில் 3 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் மீண்டும் முதலிடத்திற்கு ராஜஸ்தாண் அணி முன்னேறியது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?