நாயகன் மீண்டும் வரார்..? இந்திய டி20 அணியில் மறுபடியும் தோனி..? பிசிசிஐ போட்ட பக்கா மாஸ்டர் பிளான்.. குஷியில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 2:29 pm

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்தித்த நிலையில், டி20 இந்திய அணியில் தோனியை மீண்டும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி தழுவி, தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உள்பட பல வெளிநாட்டு வீரர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.தோனிக்கு இந்திய அணியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

BCCI - Updatenews360

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. ஐசிசி போட்டிகளில் அந்த அச்சமற்ற பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ-யில் பேசப்பட்டு வருகிறது.

DHoni - 12 updatenews360

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், எம்.எஸ். தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!