மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் போது… மகன் வெளியிட்ட படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கிறார் CM ஸ்டாலின்.. : அண்ணாமலை விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 4:53 pm
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலையை உயர்த்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் அறிவித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வு , சொத்துவரி உயர்வு , பால்விலை உயர்வை கண்டித்து அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியபோது :- இந்த ஆர்ப்பாட்டம் காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு விலையும் காலையில் விடிந்தவுடன் உயர்த்துகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலையை உயர்த்துன்றனர்.மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்தாலும், அதன் விலையை குறைக்காத ஒரே மாநிலம் தமழ்நாடுதான்.

தமிழகத்தில் கனிம வளகொள்ளை அதிகரித்து உள்ளது. 16 மாதங்களில் இந்த ஆட்சி செய்த ஒரே சாதனை விலை உயர்வு. இந்தியாவில் தமிழக முதல்வர் போல் விளம்பர விரும்பி முதல்வர் யாருமில்லை. விளம்பரமோனியா நோய் முதல்வருக்கு வந்துள்ளது.

16 மாதங்களாக மக்களை ஏமாற்றுகிற கதை, திரைக்கதை திமுகவினர் எழுதுகின்றனர். தமிழகத்தில் வெளியாகிற அனைத்து படங்களையும் வெளியிடுவது உதயநிதி தான். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்ற போது முதல்வர் தனது மகன் வெளியிட்ட படத்தினை பார்க்கிறார். விவசாயிகளுக்கு 3 ரூபாய் கொள்முதல் விலையை வழங்கிவிட்டு பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியுள்ளனர்.

கமிஷன் பொறுவதற்காகவே பால் விலையை உயர்த்தியுள்ளனர். ஆவின் திவாலான நிறுவனம். அரசியல்வாதிகள் கமிசன் அடிப்பதற்காகவே ஆவினை நடத்துகின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் பல அமைச்சருக்கு வாயில் கோளாறு உள்ளது. அதனால் முதல்வர் நிர்வாகத்தில் கோளாறு உள்ளது, எனக் கூறினார்.

Views: - 432

0

0