மீண்டும் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா…? மெகா பிளானில் மும்பை நிர்வாகம் ; அடுத்து குஜராத்துக்கு புதிய கேப்டன் இவரா..?

Author: Babu Lakshmanan
25 November 2023, 6:59 pm

அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவ.,26ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த காலகட்டத்தில் வீரர்களை பரிமாற்றம் செய்யும் வாய்ப்பும் அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி குஜராத் அணியில் இருந்த ஆவேஸ் கானை வாங்கி விட்டு, தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் அணி கொடுத்துள்ளது.

இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்ட்யா கடந்த 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் அந்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது. அதேபோல், கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பைனலில் தோற்று 2ம் இடம் பிடித்தது.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணி எடுக்கும் பட்சத்தில், ரஷித்கான், மில்லர் அல்லது கில் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!