முன்னாள் டிஜிபி மீதே வழக்கு… நாமெல்லாம் எம்மாத்திரம் ; தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் CM ஸ்டாலின் ; திண்டுக்கல் சீனிவாசன்!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 7:48 pm
Quick Share

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக மீது பழிவாங்கும் சூழ்நிலைதான் உள்ளது என்றும், டிஜிபி மீது வழக்கு வந்திருக்கிறது என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கரூர், நாமக்கல், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை முன்னிலையிலும், தலைவர் சேதுராமன் தலைமையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, சின்னசாமி ,சட்டமன்ற உறுப்பினர் சேகர், உள்ளிட்ட ஏரலாமானோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :- மாண்புமிகு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் ஒற்றை தலைமையில் இன்றைக்கு வழிநடத்துகிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழக்கறிஞர்கள் துணையோடு சிறப்பாக வழி நடத்திய வழக்கறிஞர்கள் வெற்றிக்கு மூலதனமாக உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் சிவி சண்முகம் மற்றும் வழக்கறிஞர் துணையோடு சிறப்பாக அதிமுக உள்ளது.

டிஜிபி மீது வழக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் நாமெல்லாம் சுண்டைக்காயை போல, அறநிலையத்துறை அமைச்சர் தற்பொழுது கொள்ளையடிக்கும் துறையாக உள்ளது. இதனை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். அதனைக் கண்டித்து பேசிய மத்திய அமைச்சர் சீதாராமன் ஒரு மத்திய அமைச்சர் என்று கூட பார்க்காமல் தரக்குறைவாக பேசிய ஸ்டாலின், டிஜிபி மேலே வழக்கு பதிவு செய்யப்படும் என்று சொன்னால், நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் ஸ்டாலின் என்று முதலமைச்சராக பதவி ஏற்றாரோ அன்றிலிருந்து அதிமுக பழிவாங்கும் சூழ்நிலை தான் உருவாக்கி இருக்கிறார்கள். இப்பொழுது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து வருகின்றன. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு இந்த கட்சி வளரும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை, இதோட அழிந்துவிடும் என நினைத்தார்கள். அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், தினகரன் மற்றும் பி டீம் ஆக செயல்படும் பன்னீர்செல்வம், இவர்கள் உதவியோடு, அதிக எம்எல்ஏக்கள் பிடித்து முதல்வராக எல்லாம் என எண்ணினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் நாலரை வருடம் 3 மாத ஆட்சி இருந்தார் என்பதும், ( 11.7.2022 ) உயர்நீதிமன்றம் சொன்னபடி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் செல்லும் என அன்று முதல் சட்ட போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடி எல்லா வழக்கிலும் எடப்பாடிக்கு வெற்றி வெற்றி என வருகிறது.

டெல்லி, சென்னையில் உள்ள வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதாடி தான் எடப்பாடி வெற்றி பெற்றதாக எங்களிடம் சொல்லுவார். துயரமான, மோசமான சம்பவங்களில் உதவுபவர்கள் தெய்வமாக தெரிவார்கள். அதை போல பொய் வழக்கு போட்டு கட்சியை அழிக்க நினைக்கும் ஸ்டாலினுக்கு வழக்கறிஞராகிய நீங்கள் தான் எடப்பாடி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என பாடுபட வேண்டும்.

டி.ஜி.பி மீது வழக்கு வந்திருக்கிறது என்றால் நாம் எம்மாத்திரம். நாம எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பூத்கமிட்டி அமைப்பதற்கு எடப்பாடி முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். நீங்களும் உடன் இருங்கள் நாளை 40க்கும் நமதே என பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும், என்றார்.

Views: - 211

0

0