146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2வதுமுறை… ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி ; மேட்சை மாற்றிய அந்த ரன் அவுட்..!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 12:10 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் வெலிங்டனில் நடைபெற்றது. ப்ரூக் (186), ரூட் (153 நாட் அவுட்) ஆகியோரின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, 4வது நாள் ஆட்டத்தில் 483 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி ஆவேசமாக பந்துவீசியது. இதனால், இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 258 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 ரன்கள் வித்தியாசத்திக் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

முதல் இன்னிங்சில் 186 ரன்கள் குவித்து ரனு குவிப்புக்கு வித்திட்ட இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்ஸ் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளையில், 146 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2494 டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடைபெற்றிருக்கின்றன. இதில் நான்காவது முறை மட்டுமே ஒரு அணி பாலோ ஆன் ஆகி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று இருக்கிறது . இதற்கு முன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஃபாலோ ஆன் ஆகி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் அணி வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 364

0

0