இந்தியாவ மட்டும் எப்படியாச்சு தோக்கடிச்சுருங்க : ஜிம்பாப்வே பையனை கல்யாணம் பண்ணிக்குற.. ஆஃபர் அறிவித்த பாகிஸ்தான் நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2022, 7:16 pm
Pak Actress Zimbabwe - Updatenews360
Quick Share

இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை சவால் விடுத்து உள்ளார்.

நேற்றைய வங்காளதேசத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது அதிக ஆர்வமுள்ள பாகிஸ்தான் ரசிகர் தொடர்ந்து டுவீட் செய்து, இந்தியா போட்டியில் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பினார்.

வரும் 6ஆம் தேதி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது. இந்தப் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி வரவிருக்கும் போட்டி குறித்து டுவீட் செய்துள்ளார், மேலும் ஜிம்பாப்வே இந்தியாவை தோற்கடித்தால், ‘ஜிம்பாப்வே பையனை’ திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என டுவிட் செய்து உள்ளார். இந்த டுவீட் பல லைக்குகளையும் ரீடுவீட்களையும் பெற்றுள்ளது.

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் செஹர் ஷின்வாரி. அவரை இன்ஸ்டாகிராமில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள் .

Views: - 242

0

1