சானியா மிர்சா – சோயப் மாலிக் தம்பதியின் உறவில் விரிசல்..? சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
8 November 2022, 4:19 pm
Quick Share

பிரபல விளையாட்டு தம்பதிகளான சானியா மிர்ச – சோயப் மாலிக் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இஷான் என்னும் 4 வயது குழந்தை இருக்கிறது. திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், தற்போது இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் மாலிக், சானியா மிர்சாவை ஏமாற்றியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரையில் உண்மை காரணம் ஏதும் வெளியாகவில்லை. இருவரும் கடந்த சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி…” என்று பதிவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது மகனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- “கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள்…” என்று பதிவிட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையேயான பிரச்சனையால் அவர்களின் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 297

0

0