மீரா TO ஆரவ்…. மாணவியுடன் காதலில் விழுந்த ஆசிரியை… திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
8 November 2022, 5:56 pm
Quick Share

கல்லூரியில் தன்னிடம் பயின்ற மாணவியை திருமணம் செய்ய ஆசிரியை ஒருவர் ஆணாக மாறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானில் அரசு பள்ளியில் கபடி பயிற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மீரா. இவரிடம், கல்பனா என்னும் மாணவி கபடி பயின்று வந்துள்ளார். கடந்த ஆறு வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மீரா, கல்பனாவிடம் தனது காதலை கூறியுள்ளார். கல்பனாவும் இதனை ஏற்றுக் கொண்டார். ஆனால், இவர்களின் வீடுகளில் இருவரின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், மீரா பாலின அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஆணாக மாறி திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். அதற்கு பிறகு மீரா தனது பெயரை ஆரவ் குந்தல் என மாற்றியுள்ளார்.

இதுகுறித்து ஆரவ் கூறுகையில், “தான் சிறு வயதில் இருந்தே தன்னை ஓர் ஆணாகவே உணர்ந்தேன். அதனால் இந்த அறுவைச் சிகிச்சை செய்யும் முடிவு இயல்பானதாகவே அமைந்தது,” எனக் கூறினார்.

Views: - 178

0

0