பட்லரின் சாதனையை சமன் செய்த ஷர்துல் தாகூர்.. ரிங்கு சிங்கும் அபாரம் ; மிரண்டு போன பெங்களூரூ!!

Author: Babu Lakshmanan
6 April 2023, 9:59 pm
Quick Share

பெங்களூரூவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஷர்துல் தாகூரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் (3), மந்தீப் சிங் (0), நிதிஷ் ரானா (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய குர்பாஷ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸலும் ரன் எதுவும் இன்றி அவுட்டானார். இதனால், கொல்கத்தா அணியின் நிலைமை அவ்வளவு தானா என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், ஷர்துல் தாகூர், ரிங்கு சிங் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் சிக்சருக்கும், பவுண்டருக்கும் பந்துகளை பறக்கவிட்டனர். இதனால், 20 பந்துகளில் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் அணி வீரர் பட்லரின் சாதனையை ஷர்துல் தாகூர் சமன் செய்தார்.

ஷர்துல் தாகூர் (68), ரிங்கு சிங் (46)வின் அதிரடியால் கொல்கத்தா அணி, பெங்களூரூவுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

Views: - 270

0

0