அபிஷேக், வில்லியம்சனின் அஸ்திவாரத்தால் ஐதராபாத் அணி வெற்றி : குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 11:26 pm
SRH WOn - Updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. மும்பை DY பட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மத்தியூ வேடு – ஷப்மன் கீல் களமிறங்கினார்கள்.

இருவரும் நிதானமான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 7 ரன்கள் அடித்து ஷப்மன் கீல் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் களமிறங்கி 11 ரன்கள் அடித்து வெளியேற, பின்னர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

பாண்டியா அதிரடியாக ஆடத்தொடங்க, மறுமுனையில் இருந்த மத்தியூ வேடு 19 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் பாண்டியாவுடன் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். ஹர்திக் பாண்டியா அரைசதம் விலாச, மறுமுனையில் களமிறங்கிய ராகுல் தேவாதியா மற்றும் ரஷீத் கான் தங்களின் விக்கெட்களை இழந்தார்கள்.

இறுதியான குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள், அபிஷேக் நிலையான அஸ்திவாரத்தை அமைத்தார்.

கேப்டன் வில்லியம்சன் நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தல் இந்த ஜோடியை ரஷித் கான் பிரித்தார். 42 ரன்கள் எடுத்த அபிஷ்க் அவுட் ஆக, அரை சதமடைத்த வில்லியம்சன் 57 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து, திரிபாதி 17 ரன் எடுத்த போது ரிட்டர்டு ஹர்ட் ஆக. பூரான் மற்றும் மார்க்ராம் ஜோடி அருமையாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 19.1 ஒவர்களில் 168 ரன்கள் எடுத்து ஐதராபாத் 2வது வெற்றியை பதிவு செய்தது.

தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 42 பந்துகளுக்கு 50 ரன்கள் அடித்தும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

Views: - 858

0

0