அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திடீர் ட்விட்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2022, 11:07 pm
Jothimani Thanks - Updatenews360
Quick Share

தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்விட்.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது கோரிக்கையை ஏற்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மாண்புமிகு. உயர் கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களைச் சந்தித்து அரவக்குறிச்சி,மணப்பாறை, விராலிமலை சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.
பிறகு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று மணப்பாறை, அரவக்குறிச்சி தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் அரவக்குறிச்சி, மணப்பாறை தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 1008

0

0