80 மாதங்களுக்கு பிறகு கோலிக்கு வந்த சோதனை… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சொதப்பல் : ரசிகர்கள் நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
11 February 2022, 6:12 pm

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

இதில், 2 போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஷ் ஐயர் 80 ரன்னும், பண்ட் 56 ரன்னும் எடுத்தனர்.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய விராட் கோலி, வெறும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில், விராட் கோலிக்கு 80 மாதங்களுக்கு மோசமான ஒருநாள் கிரிக்கெட் தொடராக, இந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் அமைந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு விராட் கோலி விளையாடிய ஒரு நாள் தொடரில் குறைந்தபட்சம் ஒரு அரைசதமாவது அடித்து வந்தார். இந்த சூழலில், தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது அதிகபட்ச ரன்களே 18ஆக உள்ளது.

முதல்போட்டியில் 8 ரன்களும், 2வது போட்டியில் 18 ரன்களும், 3வது போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 3 போட்டிகளில் சேர்த்து அவர் வெறும் 26 ரன்களே குவித்துள்ளார்.

கேப்டன் பொறுப்பு கோலியின் பேட்டிங்கை பாதிப்பதாகக் கூறியே அவரது கேப்டன் பதவியை பிசிசிஐ திரும்பப் பெற்றது. இந்த சூழலில், அவரது ஆட்டம் மீண்டும் மோசமானதாகவே இருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால், அவர் மீண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?