12 ஆண்டுகளுக்கு பிறகு கால் பதிக்கும் கோலி… இஷாந்த் சர்மா திடீர் நீக்கம்…!!
Author: kumar26 செப்டம்பர் 2024, 12:14 மணி
இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி ரஞ்சி அணியின் உத்தேசப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
2012-ல் டெல்லி அணிக்காக கடைசியாக விளையாடிய கோலி, இந்திய அணியின் முக்கிய வீரராக மாற்றம் அடைந்ததால் ரஞ்சி போட்டிகளுக்குத் திரும்பவில்லை.
சச்சின் டெண்டுல்கர் போல ரஞ்சி தொடரில் நீண்ட காலம் விளையாடாத அவர், ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களும் இப்போட்டிக்கு திரும்புவதில்லை.
இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான 84 பேர் கொண்ட டெல்லி அணிப் பட்டியலில் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: முதல் 53 பந்துகளில் ரன்னே இல்ல… பிறகு உண்மை முகத்தை காட்டிய இளம் வீரர்… ரஞ்சி போட்டியில் நடந்த சுவராஸ்யம்..!!
எனினும், இந்திய அணியின் தொடர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளால் இந்த சீனியர் வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு.
ஆனால், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இசாந்த் சர்மா இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
35 வயதான அவர் அண்மையில் டெல்லி பிரிமியர் லீக் தொடரிலும் விளையாடாததால், விரைவில் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாயங் யாதவ், ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
0
0