வார்னர் நிலைமை யாருக்கும் வரக்கூடாது… கட்டாய வெற்றியில் ஐதராபாத் : முன்னேறுமா டெல்லி அணி?!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 10:02 pm
Delhi Vs SRH - Updatenews360
Quick Share

2014ஆம் ஆண்டிலிருந்து ஐதராபாத் அணிக்காக விளையாடி, வியர்வை, ரத்தம் சிந்தி, அணிக்கு கோப்பையையும் வென்று தந்து இருக்கிறார்.

அப்படிப்பட்ட டேவிட் வார்னர், ஒரு சீசனில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார். ஐதராபாத் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த வார்னர், தற்போது மீண்டும் தனது இரண்டாவது வீடான ஐதராபாத்திற்கு வந்துள்ளார்.

இது குறித்து டாசின் போது பேசிய வார்னர், ஐதராபாத் மக்கள் என்னை எவ்வளவு விரும்புவார்கள் என்று எனக்கு தெரியும் என்று பழைய நியாபகங்களை சுமந்த படி சொன்னார். தம்மை அவமானப்படுத்திய ஐதராபாத்தை வச்சி செய்ய முடிவு எடுத்த வார்னர், டாஸ் வென்ற உடன் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்வதாக கூறினார்.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் 25 ரன்னும் சேர்த்தனர். சர்பராஸ் கான் 10, அமன் ஹகிம் கான் 4 என விரைவில் விக்கெட்டை இழந்தனர். 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின் மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 34 ரன்கள் சேர்த்தனர். ரிபால் பட்டேல் 5 ரன், அன்ரிச் நோர்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட் ஆக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.

ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் ப்ரூக் மற்றும் மயங்க் நிதானமான ஆட்டத்தை ஆடினர். ஒரு கட்டத்தில் 14 பந்துகளுக்கு 7 ரன் அடித்திருந்த ப்ரூக் அவுட் ஆனார்.

6 ஓவர் முடிவில் ஐதபராத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

Views: - 300

0

0