அதிமுகவில் இணைவதற்கு மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் முட்டுக்கட்டை: ஜெ.தீபா குற்றச்சாட்டு

5 December 2019, 10:53 pm
Chennai J.Deepa Press Meet-Updatenews360
Quick Share

சென்னை: அதிமுகவில் இணைவதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜெ.தீபா குற்றச்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கிய ஜெ. தீபா, பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். கடந்த மாதம் திடீரென செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா தனது அமைப்பை கலைப்பதாகவும், அதிமுகவில் இணைய உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் இன்று தனது தி.நகர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா,அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பின்னரும் அதிகமுவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை என்றும், அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டினார்.

மேலும் தங்களை தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு உரிய மரியாதை கொடுக்கவில்லை என கூறிய அவர், கட்சியில் தனக்கு கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்படும் என எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் தங்கள் தொண்டர்கள் சென்ற போது அங்கு உரிய மரியாதை இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜெ. தீபா, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் கலந்தாலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும், தன் அத்தைக்கு பிடிக்காது என்பதால் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை அதே போல் மற்ற கட்சியில் ஆனால் சேர்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறினார். மேலும் அதிமுகவில் இணைவதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிவித்தார்.