பொன்.மாணிக்கவேலிடம் இருந்து எந்த ஆவணங்களோ விளக்கமும் வரவில்லை…!!!

5 December 2019, 10:13 pm
IG Anbu Byte-Updatenews360
Quick Share

சென்னை: பொன்.மாணிக்கவேலிடம் இருந்து அதிகாரபூர்வ எந்த ஆவணங்களோ விளக்கமும், தங்களுக்கு வரவில்லை என சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஏடிஜிபி அபய் குமார் தலைமையில் அனைத்து சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிலை தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, எஸ்.பி.ராஜேஸ்வரி மற்றும் அனைத்து மாவட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. ,, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு, ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நிலுவையாக உள்ள வழக்குகளை எப்படி விரைவாக முடிப்பது என்றும், அதிகாரிகள் முனைப்பாக செயல்படுவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த கட்டமாக ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அவர்களிடம் இருக்கும் வழக்குகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொன்.மாணிக்கவேல் இடமிருந்து எந்த ஆவணமோ விளக்கமோ, தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். மேலும் தனக்கு உள்ள பணி அனுபவத்தை வைத்து உயர் அதிகாரிகள் ஆலோசனையை ஏற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட இருப்பதாக அவர் கூறினார்.