முதலமைச்சரிடம் விருது வாங்கிய விஏஓ-வுக்கு மரியாதை!! ஊர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு.!!

17 August 2020, 6:12 pm
Viruthunagar VAO - Updatenews360
Quick Share

விருதுநகர் : கொரோனா காலத்தில் பணியாற்றிய சிறந்த முன் களப்பணியாளர்க்கான விருதை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் விருதுடன் ஊர் திரும்பியவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரவேற்பு அளித்தனர்.

கொரோனா பரவுதலை தடுக்க தமிழக அரசு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தியது. அரசு ஊழியர்களான காவல்துறையினர் மருத்துவர்கள் வருவாய்த்துறையினர் போன்ற பல்வேறு துறையினர் முன் களபணியாளர்களாக பணியாற்றினர்.

இதில் சிறப்பாக பணியாற்றிய 27 பணியாளர்களுக்கு சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சான்றிதழையும் பதக்கத்தையும் வழங்கினார். இதில் தடுப்பு பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களின் சிறப்பாக பணியாற்றியவர் என்பதற்கான விருதை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் பிரித்திவிராஜ்க்கு வழங்கப்பட்டது.

அவர் தற்பொழுது கொரோனா ஊரடங்கில் பணியாற்றிய முன்கள பணியாளர்களின் தமிழகத்திலேயே சிறந்த கிராம நிர்வாக அலுவலர் என்ற பாராட்டுச் சான்றிதழையும் பழக்கத்தையும் பெற்றுள்ளார். விருது மற்றும் சான்றிதழ் பெற்று வந்த கிராம நிர்வாக அலுவலரை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

Views: - 36

0

0