அக்கம் பக்கம் பார்த்து திரும்பு… வேகமாக வந்த பால் வண்டி மீது பைக் மோதி விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
15 October 2022, 12:56 pm

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் இவர், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்சந்தை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

குளச்சல் அரசு மருத்துவமனை அருகே வந்த போது, தர்மலிங்கம் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் வலது பக்கமாக செல்ல திருப்பியுள்ளார். அப்போது, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதியது.

இதில் தர்மலிங்கம் இருசக்கர வாகனத்துடன் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருசக்கர வாகனம் மீது பால் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

https://player.vimeo.com/video/760535059?h=5fe182a3e3&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?