கட்டிய சில மாதங்களிலே ஏனாதிமங்கலம் – மாரங்கியூர் இடையிலான தாரைப்பாலம் துண்டிப்பு : 4 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Author: Babu Lakshmanan
29 August 2022, 11:16 am

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் – மாரங்கியூர் இடையே இந்தாண்டு ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோரையாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோரையாற்றில் அதிக தண்ணீர் வந்ததால் ஏனாதிமங்கலம் -மாரங்கியூர் இணைப்பு தரைப்பாலம் 24 லட்சம் மதிப்பீடு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஏனாதிமங்கலம் மாரங்கியூர் இடையே அமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் கோரையாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயநல்லூர் ஆகிய நான்கு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தற்பொழுது, இவர்கள் இதனால் 10 கிலோமீட்டர் சுத்தி வெளியே வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் இதனால் அந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

  • You don't deserve to be an actor.. The producer who ripped off Yogi Babu நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய இயக்குநர்!