சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த தனுஷ்.? ஐஸ்வர்யா ரஜினிகாந்த போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா.?

Author: Rajesh
6 July 2022, 1:35 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்குமோ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.

இப்படி ஓர் சம்பவம் நடந்த பிறகு, இருவரும் அவரவர் துறைகளில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர், இருவரும் கணவன்-மனைவியாக இருந்தபோது வசித்துவந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மேலும், அந்த வீட்டில் மாட்டப்பட்டுள்ள பலகையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இரு பெயர்களும் இடம் பெற்றுள்ளதாம். அது தற்போது வரை நீக்கப்பட வில்லையாம். மேலும், இருவரும் தனித்தனியே அந்த வீட்டிற்கு வந்து சொல்கின்றனராம்.

இதனை கேட்ட சினிமா துறையினர் மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் மலருமா, மீண்டும் இணைந்தால் நல்லதுதான் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த நிலையில்இ நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு ஐஸ்வர்யா தனக்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!