முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் தேர் திருவிழா: சிறப்பு பூஜையில் பங்கேற்று பக்தர்கள் தரிசனம்..!!

Author: Rajesh
28 April 2022, 1:05 pm

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி முதலியார்பேட்டையில் அமைத்துள்ளது ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோயில். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை இந்திர விமானம், சூரியபிரபை வாகனம், சேஷாவாகனம், கருடசேவை உள்ளிட்ட சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளியவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்றும் காலை நடைபெற்றது. ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் அலங்கரிப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரினை பல்வேறு வீதிகளில் வழியாக கொண்டு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை வணங்கி சென்ற்னர்.

  • vijay does not come out after 6 o clock said by suriya siva 6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்