குடியை கெடுத்த மது…ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை: உயிரை பறித்த உயிர் நண்பர்கள் 4 பேர் கைது..!!

Author: Rajesh
28 April 2022, 1:40 pm
Quick Share

சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை நண்பர்களே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய நாபாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன். ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு வேலை முடித்துவிட்டு நண்பர்களுடன் மணலி புதுநகர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது மதுபோதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறில் அவரது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கத்தியால் ரவிச்சந்திரனை தலையில் வெட்டி உள்ளனர். அப்போது கத்தி உடைந்ததும் அருகிலிருந்த கல்லை எடுத்து நான்கு பேர் சேர்ந்து ரவிச்சந்திரன் தலையில் போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் பலியானார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மணலி புதுநகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் ரவிச்சந்திரனை கொலை செய்த அவரது நண்பர்களான மதன்குமார், ஜெயபிரகாஷ், தனுஷ் மற்றும் பரத் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மதுபோதையில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இவர்கள் மீது கொலை வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர். மதுபோதையில் நண்பர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 631

0

0