கோவை அருகே பிறந்து 1 மாதமே ஆன ஆண் யானை மர்ம மரணம் : அடுத்தடுத்து யானைக் குட்டிகள் மரணத்தால் கால்நடை மருத்துவர்கள் திடீர் முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 11:24 am

கோவை அட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் ஒரு மாத ஆண் யானைகுட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் யானை உயிரிழப்பு குறித்து கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது அட்டுக்கல் அடர்வனப் பகுதியில் சென்ற போது அங்கு பிறந்து சுமார் 1 மாதமே ஆன நிலையில் ஆண் யானைக் குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அங்கு வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலை நேரம் ஆனதால் குட்டி யானைக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத குட்டியானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து கண்டறிய கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் குட்டியானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

உடற்கூறு ஆய்வு முடிவிற்கு பிறகே காரணம் தெரியவரும், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமுகை வனப்பகுதியில் 2 மாத குட்டியானை சடலமாக கண்டறியப்பட்ட நிலையில் மீண்டும் 1 மாத ஆண் யானைக்குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?