கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 10 பேர் பலி.!! கிராம மக்கள் அச்சம்.!!

6 May 2021, 4:04 pm
Quick Share

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான புதிய நோயாளிகளும், ஆயிரக்கணக்கான மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகளும், பிணங்களை எரிக்க முடியாமல் சுடுகாடுகளும் திணறி வருகின்றன. கொரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் சுகாதாரத்துறையும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தில், கொரோனா தொற்று காரணமாக ஒரே வாரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால், சுகாதாரத்துறை கிராம மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Views: - 134

0

0