டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நபர் கைது : ரூ. 7.59 லட்சம் பறிமுதல்

5 May 2021, 1:07 pm
cbe theft - updatenews360
Quick Share

கோவை: கோவையில் டாஸ்மாக் கடையில் நுழைந்து கொள்ளையடித்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.7.59 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை லாலி ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஞாயிறு ஊரடங்கை பயன்படுத்தி கடந்த மாதம் 26ம் தேதி இரவு கடையின் ஷட்டரை உடைத்து ரூ.10,72, 220 கொள்ளை அடிக்கப்பட்டது.

இது குறித்து ஆர்எஸ் புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளையனை பிடிக்க உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது

கொள்ளை குறித்து தனிப்படையினர் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர். இந்நிலையில் சீர நாய்க்கன்பாளையம் என் .ஜி.ஆர் வீதியைச் சேர்ந்த குமார் என்ற சதீஷ் குமார் (29 ) என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ 7, 59, 000 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையிலடைத்தனர்.

Views: - 94

0

0