கள்ளக்குறிச்சியில் தனித்து போட்டியிட்டால் 10% வாக்குகள் பெறலாம் : பிரேமலதா கணிப்பு!!

28 February 2021, 2:22 pm
Premalatha- Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : தேமுதிக தனியாக போட்டியிட்டால் 10 % வாக்குகளை பெறும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் தேமுதிகவின் தன்மானத்திற்கு இழுக்கு வருவதற்கு 1 சதவீதம் கூட தலைமைக் கழகம் முடிவு எடுக்காது. தேமுதிக தனித்துப் போட்டியிடுவதை நான் விரும்புவதாகவும் ஆனால் கேப்டன் விஜயகாந்த் மற்றும் கழகத் தோழர்களின் ஆலோசனையின்படி வாக்குகளைப் பெறுவது விட வெற்றி பெறுவது தான் முக்கியம் என்பதால் தான் கூட்டணி அமைக்கின்றோம்.

விரைவில் நமக்கான காலம் வரும் எனவும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் 10 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் கேப்டன் விஜயகாந்த் காட்டுகின்ற வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து அவரை வெற்றி பெறச் செய்ய அயராது பாடுபட வேண்டும் என கூறினார்.

Views: - 1

0

0