10 பைசா பிரியாணிக்காக கொரோனாவை மறந்த மக்கள் : 1 கி.மீ நீண்ட வரிசையில் நின்றும் ஏமாற்றம்!!

Author: Udayachandran
11 October 2020, 4:48 pm
10 Paise Biriyani- Updatenews360
Quick Share

திருச்சி : 10 பைசா பிரியாணிக்காக கொரோனாவை மறந்த பொதுமக்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் இல்லாமல் 1 கிமீ காத்திருந்து ஏமாந்து சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது, இருப்பினும் தற்போது பிரியாணி மீதான நாட்டம் மக்களிடையே அதிகரித்துள்ளது இதனை விரும்பி உண்பதற்கு தனிக்கூட்டம் உள்ளது.

உலக உணவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் 10 பைசாவுக்கு பிரியாணி என்றும் அறிவிப்பு வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. திருச்சியில் முதன்முறையாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் இன்று காலை முதல் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹோட்டல் முன்பு கூட்டம் அலைமோதியது.

கொரோனா காலம் என்பதனை மறந்தும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் பிரியாணிக்காக காத்து நின்றது அவ்வழியாக செல்பவரை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது என்றாலும் அதனையும் பொருட்படுத்தாது பிரியாணியை வாங்கச் செல்ல வேண்டும் என்பதற்காக பத்து பைசா நாணயங்களை கொண்டு வந்து அதனை வழங்கி பெற்றுச் சென்றனர். முதலில் வரும் 100 பேருக்கு இந்த சலுகை என்பதை தெரியப்படுத்தவும் மக்கள் குவிந்தனர் அதேநேரம் காலைமுதல் காத்திருந்தும் பிரியாணி கிடைக்காமல் 500க்கு மேற்பட்ட பொது ம்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144தடை உத்தரவு என்றும் பொதுமக்கள் கூடக்கூடாது என அரசு அறிவிப்பு விடுத்தாலும் இதுபோன்று நிறுவனங்களால் விடப்படும் அறிவிப்புகளை கேட்டு குவிந்த மக்களை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் காவல்துறையும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

இதுகுறித்து பிரியாணி வாங்கி வந்து ஏமாந்தவர்கள் கூறும்போது, அதிகாலையில் இருந்தே நாங்கள் காத்திருக்கிறோம் நூறு பேருக்கு மட்டும் பிரியாணி கொடுத்து விட்டு மற்றவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டனர் இவர்கள் நேற்று விளம்பரம் கொடுக்கும் போது 100 பேருக்கு மட்டும் என்று மிகச் சிறிய எழுத்தில் எழுதி விளம்பரம் செய்துள்ளனர் இதனால் எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அடைந்து உள்ளது இதுபோன்று இல்லாமல் பத்து பைசா கொண்டுவந்த அனைவருக்கும் பிரியாணி தர வேண்டும் என்று ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதுகுறித்து பிரியாணி வாங்கி சென்று அவர்கள் கூறும் போது, அதிகாலை 5 மணியிலிருந்து காத்திருந்தோம் எங்களுக்கு பிரியாணி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் பத்து பைசா கொண்டு வரும் அனைவருக்கும் பிரியாணி கொடுத்திருக்க வேண்டும் திருச்சியில் முதல்முறையாக இதுபோன்று அறிவித்திருப்பது வித்தியாசமாக இருந்ததால் வாங்கிச் சென்றோம் என தெரிவித்தார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறும்போது, பழங்கால நாணயங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று பிரியாணி உலக தினமான இன்று 10பைசா கொடுத்தால் பிரியாணி என்று அறிவித்திருந்தோம் நாங்கள் 100 பேருக்குதான் அறிவித்திருந்தோம் ஆனால் இவ்வளவு பொது மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை சமூக இடையுடன் நாங்கள் வரிசையில் இப்படி வைத்திருந்தோம். நேரம் செல்ல செல்ல 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தால் அடுத்த முறை இன்னும் நிறைய பேருக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்வோம் என தெரிவித்தார்.

Views: - 58

0

0