வாக்கு செலுத்தினால் 10 ரூபாய் காயின்களை செல்ல வைப்பேன் : வாக்கு கொடுத்த ம.நீ.ம வேட்பாளர்…!

Author: kavin kumar
3 February 2022, 8:30 pm
Quick Share

கரூர் : கரூரில் மக்கள் நீதி மையம் பெண் வேட்பாளர் மனு தாக்கலின் போது 10 ரூபாய் காயின்களுடன் வந்து டெபாசிட் தொகை செலுத்தினார்.

கரூர் மாநகராட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்,. 48 வார்டுகளை கொண்ட நகராட்சி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக முதல் தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில், நாளை மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதுடன், அதற்கான வேலைகளும் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மையம் கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமாக களமிறங்கி வரும் நிலையில், இன்று கரூர் மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்., ஒரு பெண்மணி திடீரென்று கையில் 10 ரூபாய் காயின்களுடன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மக்கள் நீதி மையம் மப்ளர் அணிந்து அவரது கணவருடன் வந்து டெபாசிட் தொகைகளாக ரூ 10 காயின்களை செலுத்தி அனைவரின் கவனத்தினையும், ஈர்த்தார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் 12 வது வார்டில் போட்டியிடும் அந்த பெண்மணி உமாமகேஸ்வரி (42), இவர் இப்பகுதியில் தையற்தொழில் செய்து வருகின்றார். இவரது கணவர் கண்ணன் தச்சுத்தொழில் செய்து வருகின்றார். மக்கள் நீதி மையம் கட்சியின் கரூர் கிழக்கு நகர செயலாளராகவும், மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து வருகின்றார். 12 வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு என்பதினால், மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகி கண்ணன், அவரது மனைவி உமாமகேஷ்வரியினை தேர்தல் களம் காண வேட்பாளராக நிறுத்தியுள்ளதோடு, மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டிப்பாக தீர்ப்பேன் என்று கூறிய உமாமகேஷ்வரி, முன்னதாக, கடந்த பல மாதங்களாகவே அரசு பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் ரூ 10 காயின்கள் வாங்காமல் தட்டி கழிக்கின்றனர்.

மேலும், பெட்டிக்கடைகள் முதல், மளிகை கடை வரையும், பெரிய வணிக வளாகம் வரையும் இந்த 10 ரூ காயின்கள் செல்வதில்லை என்று கூறினால் எதற்கு அந்த காயினை மத்திய அரசு வெளியிட்டது. ஆகவே கரூர் மாவட்டத்தினை பொறுத்தவரை இந்த 10 ரூ காயின்கள் தடையா ? ஆகவே இதற்கான முதன் விழிப்புணர்விற்காக தான் நாங்கள் முதன்முதலில் டெபாசிட் தொகைக்காக 10 ரூ காயின்களை ஆயிரம் ரூபாய்க்கும் மீதமுள்ள 3 ஆயிரத்திற்கு நோட்டுகளையும் மொத்தம் ரூ 4 ஆயிரத்தினை கொடுத்து தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் மட்டுமல்ல, கரூர் மக்களுக்கு நல்லது செய்யவே நாங்கள் போட்டியிடுகின்றோம் என்று உமாமகேஷ்வரி தனது கணவர் கண்ணன் ஆகியோர் சேர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

Views: - 781

0

0