மச்சினிச்சியுடன் தகாத உறவு.. தனி வீடு எடுத்து மச்சினிச்சியின் 10 வயது மகளையும் சீரழித்த ஆட்டோ ஓட்டுநர்!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2024, 1:56 pm
sss
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சார் 33 வயது ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவருக்கும் ஒரு பெண் குழந்தையின் தாயான மனைவியின் சொந்த சகோதரியுடன் கள்ள தொடர்பு ஏற்பட்ட நிலையில் முகமது அன்சார் அந்த பெண்ணையும் தனியாக வீடு எடுத்து அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பெண் வீட்டில் இல்லாத போது அவரது 10-வயது பெண் குழந்தையான சிறுமியை முகமது அன்சார் மிரட்டி கடந்த சில மாதமாக தொடர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாயின் கள்ள காதலன் முகமது அன்சார் மற்றும் தாயின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுமி தாயிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியும் அவர் கண்டு கொள்ளாததால் ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியேறி பக்கத்து தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமை பற்றி பாட்டியிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதனையடுத்து பாட்டி அந்த சிறுமியுடன் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து புகாரளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு முகமது அன்சார் மீது 12-வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தது கொலை மிரட்டல் விடுத்தது போக்சோ உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இரவு குடிபோதையில் இருந்த முகமது அன்சார் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்து செல்ல முயன்றுள்ளார்.

இதனால் அதிர்சியடைந்த சிறுமியின் பாட்டி சத்தம் போடவே அங்கு திரண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்ததோடு தப்ப முயன்ற முகமது அன்சாரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்

இதில் படுகாயமடைந்த முகமது அன்சார் சிகிட்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து வந்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவனை கைது செய்ததோடு படுகாயங்களோடு இருந்த அவனை சிகிட்சைக்காக போலீஸ் காவலுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Views: - 325

0

0