“முதற்கட்டமாக 100 கோடி வேணும்“ : பிரதமருக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம்!!

28 November 2020, 8:43 pm
Narayana Samy - Updatenews360
Quick Share

புதுச்சேரி : நிவர் புயலால் 400 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்டமாக 100 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, கடந்த 26ம் தேதி கரையை கடந்த நிவர் புயலால் புதுச்சேரியில் விவசாய நிலங்கள், குடிசை வீடுகள், சாலைகள் என 400 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி கேட்டு பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் வரும் நேரத்தில் செயல்படாத எதிர்கட்சிகள் அனைத்தும் தற்போது அறிக்கை விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் இது மக்கள் மத்தியில் எடுபடாது எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.