100 ஆண்டு காலம் அம்மாவின் ஆட்சி தொடரும் : அமைச்சர் காமராஜ்..

By: Udayachandran
10 October 2020, 5:22 pm
Minister Kamaraj - Updatenews360
Quick Share

திருவாரூர் : இன்னும் 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருக்கும் என உறுதியை ஏற்றுள்ளதாக மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

அதிமுக தலைமை கழகம் கட்சியின் செயல்பாடுகளை கவனித்து கொள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வருகை தந்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெற்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைக்கு தொண்டர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், சாதாரண ஏழை எளிய மக்கள் அதிமுக-வை நம்பியுள்ளார்கள்.

மூன்றாவது முறையாக 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறிய அமைச்சர், அம்மாவின் கனவை நினைவாக்கும் வகையில் இன்னும் 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் இருக்கும் என உறுதியை ஏற்றுள்ளோம் என தெரிவித்தார் .

Views: - 34

0

0